இந்த நிலையில்,5 மாதங்களுக்கு பிறகு நஸ்ரல்லா மற்றும் சபீயிதின் ஆகியோருக்கு இறுதி சடங்குகள் பெய்ரூட்டில் உள்ள காமில் சவுமன் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இறுதிச் சடங்கு நடந்த விளையாட்டு மைதானத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனர்கள் 620 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு,‘‘பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனர்களை விடுதலை செய்யப்போவதில்லை என்றார்.
The post இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு 5 மாதங்களுக்கு பின் இறுதி சடங்கு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.
