கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் குரங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழப்பு

பெலகாவி:கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் பலியான நிலையில், தடுப்பூசி இருப்பு இல்லாததால் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் சிக்மகளூருவில் 43 வயதான பெண் விவசாயத் தொழிலாளி ஒருவர் குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் க்யாசனூர் வன நோயால் (கேஎப்டி) உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குரங்கு காய்ச்சல் வைரசானது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாட்களில் குணமடைய முடியும். இரண்டாவது முறையாக நோய்த்தொற்று ஏற்பட்டால் மட்டுமே, தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்பட்டால் ரத்த வாந்தியை ஏற்படுத்தும். நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த குரங்கில் இருந்து மனிதனுக்கு நோய் தொற்று பரவுகிறது. ஷிவமோகாவில் உள்ள மருத்துவமனையில் குரங்கு காய்ச்சல் தொற்றுடன் பெண் விவசாயி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

ெதாடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 10 நாட்களில் மூன்று பேர் குரங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர். ஏற்கனவே உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபூர் நகரில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்த நோய் கடந்த ஆண்டை விட மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 500 பேர் குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்பு தடுப்பூசி இருப்பு இல்லை. கடந்த ஆண்டு நவம்பரில் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன. தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது’ என்றார். இதற்கிடையே கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டியில், ‘அடுத்தாண்டு மே மாதத்திற்குள் தடுப்பூசி கிடைத்துவிடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

The post கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் குரங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: