நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெறாத 770 பேருக்கு மறுதேர்வா? எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு நாளை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், ‘தற்போது மறுத்தேர்வு எழுத உள்ள 1,563 மாணவர்களில் 700 பேர் ஏற்கனவே எழுதிய நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள்.

அவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும், நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை கல ந்தாய்வு நடப் பதையும் நிறுத்த முடியாது என்று உத்தர விட்டனர்.

The post நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெறாத 770 பேருக்கு மறுதேர்வா? எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு appeared first on Dinakaran.

Related Stories: