ஆனாலும் மெக்கேர்தி, காம்பர் ஆகியோர் அணியை கவுரவமான ஸ்கோருக்கு நகர்த்தி சென்றனர். கூடவே கிரெய்க் யங் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. அந்த ஆட்டத்தை இன்றும் தொடர அயர்லாந்து வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள். ஆனால் அதனை இளம், புதுமுக வீரர்களை கொண்ட வலுவான இந்திய அணி எளிதில் சமாளிக்கும். காரணம் பந்து வீச்சில் பிஷ்னாய், பிரசித் வாஷிங்டன், துபே ஆகியோர் மிரட்டுகின்றனர். கூடவே மழை குறுக்கிட்டதால் முதல் ஆட்டத்தில் வெளிப்படாத இந்திய பேட்டிங் திறன் இன்று வெளிபடும். அதனால் பும்ரா தலைமையிலான இந்திய அணிக்கு இன்று வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
* இணைந்தார் பும்ரா
தான் கேப்டனான முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற இந்திய வீரர்கள் டோனி, ரெய்னா, ரஹானே, ரோகித், ஷிகர், ஹர்திக், ராகுல் வரிசையில் பும்ராவும் இணைந்துள்ளார்.
The post அயர்லாந்துக்கு எதிரான டி20: தொடரை வெல்லும் இந்தியா appeared first on Dinakaran.
