நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி

 

நவிமும்பை: 5 அணிகள் பங்கேற்கும் 4வது சீசன் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி.20 தொடர் நேற்று தொடங்கியது. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சஜீவன் சஜனா, நிக்கோலா கேரி 40 ரன் அடித்தனர். ஆர்சிபி நாடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய ஆர்சிபி அணியில் கிரேஸ் ஹாரிஸ் 25, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 18 ரன் அடித்தனர்.

கடைசி 2 ஓவரில் 29 ரன் தேவைப்பட்ட நிலையில் 19வது ஓவரில் 11 ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் 18 ரன் தேவைப்பட்ட நிலையில் முதல் 2 பந்து டாட் பாலான நிலையில் நாடின் டி கிளார்க் 3வது பந்தில் சிக்சர், 4வது பந்தில், பவுண்டரி, 5வது பந்தில் சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்றது. நாட் அவுட்டாக 44 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன் விளாசியதுடன், 4 விக்கெட் எடுத்த நாடின் டி கிளார்க் ஆட்டநாயகி விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் மந்தனா கூறுகையில், “முதல் போட்டி த்ரில்லர் போட்டியாக அமைந்தது. ஆர்சிபி அணி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது. நாடின் ஆட்டம் அற்புதமானது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறையில் நாடின் எங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்தார்’’ என்றார். இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-உபி.வாரியர்ஸ் மோதி வருகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் மோதுகின்றன.

Related Stories: