தென் ஆப்ரிக்கா அணிக்கு 297 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா


பார்ல்: 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு 297 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பார்ல் நகரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108, திலக் வர்மா 52 ரன்களும் எடுத்தனர். இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் 2 2 எடுத்து தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

The post தென் ஆப்ரிக்கா அணிக்கு 297 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: