தமிழக அரசுக்கு எவ்வளவு கடன்: பட்ஜெட்டில் தகவல்

தமிழக அரசுக்கு உள்ள கடன் குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வருவாய், வருவாய் வரவு- செலவு, நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த கடன் அளவு ஆகியவற்றின் விவரம் வருமாறு: மொத்த வரவினங்கள் (பொதுக்கடன் நீங்கலாக) -(ரூ.2,73,246 கோடி) -ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி, மொத்த செலவினங்கள் – (ரூ.3,08,055 கோடி) -ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 504 கோடி, வருவாய் வரவுகள் – (ரூ.2,72,577 கோடி) – ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 10 கோடி.

வருவாய் செலவினம் -(ரூ.3,17,484 கோடி) – ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 289 கோடி, வருவாய் பற்றாக்குறை – (ரூ.44,907கோடி) – ரூ.49 ஆயிரத்து 279 கோடி, நிதிப்பற்றாக்குறை – (3.45 சதவீதம்)- 3.44 சதவீதம், ஒட்டுமொத்த கடனளவின் மதிப்பீடு -(ரூ.7,26,028.03 கோடி) – 8 லட்சத்து 33 ஆயிரத்து 361.80 கோடி, மூலதனச் செலவினம் – (ரூ.42,532 கோடி) – ரூ.47 ஆயிரத்து 681 கோடி ஆகும். (அடைப்புக்குறிக்குள் இருப்பது 2023-24-ம் நிதி ஆண்டுக்கானது).

The post தமிழக அரசுக்கு எவ்வளவு கடன்: பட்ஜெட்டில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: