ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா – அர்ஜென்டினா டிரா

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அடுத்து 2வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் நேற்று மோதியது. அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 4-1 என வென்றிருந்தது. இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் தாக்குதலை தொடுக்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் கால் மணி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 2வது குவார்ட்டரில் அர்ஜென்டீனா வீரர் லூகாஸ் மார்டின்ஸ் அதிரடியாக கோலடித்து (22வது நிமிடம்) அசத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய அணியினர் சற்று தடுமாறினர். இடைவேளையின்போது அர்ஜனெ்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

3வது குவார்ட்டரில் இரு அணி வீரர்களின் கோல் முயற்சிக்குள் பலன் தரவில்லை. 4வது கால் மணி நேர ஆட்டத்திலும் அதே நிலைமை தொடர்ந்து. அதனால் இந்திய வீரர்கள் பல பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அதிரடியாக கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வர இந்திய ரசிகர்களும், வீரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியா 4 புள்ளிகளுடன் (1 வெற்றி, 1 டிரா) பி பிரிவில் 3வது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம் (6), ஆஸ்திரேலியா (6) முதல் 2 இடங்களில் உள்ளன. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் இன்று மாலை அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

The post ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா – அர்ஜென்டினா டிரா appeared first on Dinakaran.

Related Stories: