கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னையில் கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். திராவிட பேரொளி அயோத்திதாசர் 1845 மே 20ம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த வல்லக்காலத்தி அயோத்திதாசர் எனும் ஆசிரியர் பெயரை தன் பெயராகவே மாற்றிக் கொண்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், பதிப்பாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழி புலவர் என்ற பன்முக ஆற்றலை பெற்றிருந்தார். 1892ம் ஆண்டு சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு 2 கோரிக்கை வைத்தார். அதில் ஒன்று கல்வி உரிமை, மற்றொன்று நில ஒதுக்கீடு. அயோத்திதாசர் தாமே முன்னின்று தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்கு அரும்பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவருக்கு கல்வி வசதியோடு உதவித்தொகை மற்றும் அரசு வேலையும், உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி கண்டார்.

திராவிட பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் எண்ணப்படி, எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு செயல்பட்ட அவரது புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்பி, எம்எல்ஏக்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். 1892ம் ஆண்டு சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு 2 கோரிக்கை வைத்தார். அதில் ஒன்று கல்வி உரிமை, மற்றொன்று நில ஒதுக்கீடு.

The post கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: