6,244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு

சென்னை: 6244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சரை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது: குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள், அதாவது வருகிற 25ம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம். www.tnpsc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே தங்களுடைய ஆட்சேபனைகளை அனுப்பலாம். ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள், கருத்துக்கள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவு ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். அடுத்து கலந்தாய்வையும் நடத்த டிஎன்பிஎஸ்சி தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 6,244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: