பயணிகள் பயணிக்கும்போது அவர்களுக்குரிய பயணச்சீட்டினை பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் அனைத்து நேரக்காப்பாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The post அரசு பஸ்களில் பயணிகளிடம் சில்லறையை கேட்டு நிர்பந்திக்கக்கூடாது: கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.