சென்னை: சென்னையின் முதல் இரட்டை அடுக்கு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. போரூர் – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் கோபால், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் பேட்டி அளித்துள்ளார். போரூர் முதல் வடபழனி வரை 5.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
சென்னை: போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது. 5 முதல் 10 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே ரயில் என்ஜின் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று முழு ரயிலையும் இயக்கி சோதனை நடைபெறுகிறது. தண்டவாள செயல்திறன், சிக்னலிங் அமைப்பு, ரயில் பெட்டி இயக்கத்திறன் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காலை 7 மணிக்கு தொடங்கும் போக்குவரத்து நெரிசல் இரவு 10 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள இடத்திற்கு செல்லவே பல மணி நேரங்கள் தேவைப்படுகிறது.
எனவே அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்காவும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களுக்கு உடனடியாக செல்லும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தினந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் சென்னையில் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது வழித்தடத்தில் பூந்தமல்லி- போரூர் சந்திப்பு வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் 100 % முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எனவே இந்த வழித்தடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் மெட்ரோ ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே விரைவில் சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது பூந்தமல்லி- போரூர் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று போரூர் மற்றும் வடபழனி இடையே முதல் முறையாக சோதனை மெட்ரோ ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது முதற்கட்ட இழுவை சோதனை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன, நேற்று நள்ளிரவில் அந்த பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து போரூர் – வடபழனி வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
போரூர் – வடபழனி இடையிலான DOWN LINE-ல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. சென்னையில் முதன்முறையாக போரூர் – ஆழ்திருநகர்
இடையே முதல் டபுள் டக்கர் மெட்ரோ வழித்தடம் அமைந்துள்ளது; இதேபோன்று மெட்ரோ ரயில் பாதையில் முதன்முறையாக 5 டிராக்குகளும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளன
போரூர் முதல் வடபழனி வரையிலான டவுன் லைன் வழித்தடத்தில் 5 முதல் 10 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பூவிருந்தவல்லி – கலங்கரை விளக்கம் இடையிலான மெட்ரோ ரயில் 2வது கட்ட 4வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. டவுன் லைனில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அப் லைனில் 3 நாட்களுக்கு பிறகு சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
போரூர் சந்திப்பு, காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் ஆகிய 5 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. பூவிருந்தவல்லி – போரூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு ஏற்கனவே சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. போரூர் – வடபழனி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஒரு முக்கியமான மைல்கல். முதல் கட்டத்தில் பயணிப்பவர்கள் 2ம் கட்ட வழித்தடத்தில் பயணிக்க வசதியாக வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
ஜனவரி இறுதிக்குள் போரூர் – வடபழனி வழித்தடத்தில் 35 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும். போரூர் – வடபழனி வரையிலான வழித்தடத்தில் மணிக்கு 35 – 40 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். வடபழனி – பூவிருந்தவல்லி இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் ஜூனில் முழுமையாக நிறைவடையும். 25 நிமிடத்தில் பூவிருந்தவல்லியில் இருந்து வடபழனி வந்தடையலாம். போரூர் – வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்துக்குள் ரயில் சேவை தொடங்கும்.
