திண்டுக்கல்: பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார் என்று திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்கள் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
