தாய்நாட்டுப் பற்று பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரன் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: தாய்நாட்டுப் பற்று பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரன் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த திருப்பூர் குமரன் நினைவுநாள்! ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சாலைக்கு தியாகி குமரன் சாலை என்றும் பெயர் சூட்டியுள்ளோம். கொடி காத்த குமரன் சிலையை ஈரோட்டில் நிறுவியது திமுக அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

Related Stories: