இறுதியில் இன்று இந்தியா இலங்கை மோதல்: மகளிர் ஆசிய கோப்பை டி20 பிற்பகல் 3.00 மணிக்கு தொடக்கம்

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பைனலில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கையில் கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் வங்கதேசம் உள்பட 8 அணிகள் களமிறங்கின. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா (6), பாகிஸ்தான் (4) மற்றும் பி பிரிவில் இருந்து இலங்கை (6), வங்கதேசம் (4) அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேத்தை வீழத்தி முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையடுத்து, இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் பைனலில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

இது வரை நடந்த 8 ஆசிய கோப்பையின் பைனலிலும் விளையாடி உள்ள இந்தியா, ஒரே முறை மட்டும் வங்கதேசத்திடம் கோப்பையை பறிகொடுத்தது. எஞ்சிய 7 கோப்பைகளையும் இந்தியாவே வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறை பைனலில் இந்தியாவிடம் தோற்று 2வது இடத்தையே பிடித்த நிலையில், இன்று 6வது முறையாக மோதுகிறது. இந்தியா 8வது முறையாகவும், இலங்கை அணி முதல் முறையாகவும் ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், பைனலில் அனல் பறப்பது உறுதி.

நேருக்கு நேர்

* இந்தியா – இலங்கை இதுவரை 22 முறை மோதியுள்ளதில், இந்தியா 18-4 என முன்னிலை வகிக்கிறது.

* அதிகபட்சமாக இந்தியா 168, இலங்கை 155 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக இந்தியா 71, இலங்கை 49 ரன் எடுத்துள்ளன.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

The post இறுதியில் இன்று இந்தியா இலங்கை மோதல்: மகளிர் ஆசிய கோப்பை டி20 பிற்பகல் 3.00 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: