போலி ரசீது, ஆவணங்கள் உருவாக்கி ரூ.4,716 கோடி ஜிஎஸ்டி மோசடி: மேற்கு வங்கத்தில் 4 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வணிக வரித்துறை சோதனையில் போலி ரசீதுகள் மூலம் ரூ.4,716 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேற்கு வங்க வணிகவரித்துறை(மாநில ஜிஎஸ்டி) ஆணையர் காலித் அன்வர் நேற்று கூறுகையில், ‘‘ கடன் மற்றும் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதிகளை அளித்து அப்பாவி பொதுமக்களின் பான், ஆதார் மற்றும் பிற அடையாள ஆவணங்களை மோசடி கும்பல் பெற்றுள்ளது. பின்னர், அவற்றைப் பயன்படுத்தி,பல போலி நிறுவனங்களை உருவாக்கி,ஜிஎஸ்டி பதிவுகளைப் பெற்றிருக்கின்றனர். மேலும் போலி வாடகை ஒப்பந்தங்கள், மின்சாரக் கட்டணம், சொத்து வரிச் சான்றிதழ்கள் மற்றும் வளாகத்தின் உரிமையாளர்கள் மற்றும் நோட்டரிகளின் கையொப்பங்களையும் உருவாக்கியுள்ளனர். இந்த மோசடியில் பெறப்பட்ட தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்துள்ளனர். இரண்டு வழக்குகளில் ரூ.4,716 கோடிக்கு போலி ரசீதுகளை உருவாக்கியதன் மூலம் ரூ.801 கோடிக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக மோசடி கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

The post போலி ரசீது, ஆவணங்கள் உருவாக்கி ரூ.4,716 கோடி ஜிஎஸ்டி மோசடி: மேற்கு வங்கத்தில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: