இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்க இன்றே (06.04.23) கடைசிநாள்!

டெல்லி : இளநிலை மருத்துவ படிப்புகளளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆணையம் நடத்தி வருகிறது.

அதன்படி 2023-2024ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு nta.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

The post இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்க இன்றே (06.04.23) கடைசிநாள்! appeared first on Dinakaran.

Related Stories: