இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்று இறந்த ஒருவரது உடலை கிழக்கு போலீசார் அனுமதியுடன், போலீஸ்காரர் புகழேந்திரன் முன்னிலையில் டிரைவர் வெங்கடேசன் நேற்று நல்லடக்கம் செய்தார். இது அவர் அடக்கம் செய்த 170வது சடலமாகும். உறவுகள் இறந்தாலே கண்டுகொள்ளாதவர்கள் மத்தியில் வெங்கடேசனின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உதவும் கருணை கரங்கள் அமைப்பு மூலம் இந்த சேவையை அவர் செய்து வருகிறார்.
The post 170 ஆதரவற்ற சடலங்கள் சொந்த செலவில் அடக்கம்: கார் டிரைவருக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.
