விமர்சனத்தைப் பற்றி இம்மி அளவும் நான் கவலைப்படவில்லை..நல்லதை எடுத்துக் கொள்வேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பல்வேறு சாதனைகளையும் செய்திருக்கிறீர்கள். சில விமர்சனங்களும் வந்திருக்கிறது. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்படி இதை பார்க்கிறீர்கள் என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விமர்சனத்தைப் பற்றி இம்மி அளவும் நான் கவலைப்படவில்லை. நல்லதை எடுத்துக் கொள்வேன். கெட்டதை புறந்தள்ளி விடுவேன். ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு இதே இடத்தில், உங்களை எல்லாம் சந்தித்தபோது சொன்னேன். இந்த ஆட்சி ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்துதான். ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில், எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று சொன்னேன். அதன்படிதான், ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் எப்படி இரண்டு வருடங்களாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டிருந்தீர்களோ, அதேபோல, தொடர்ந்து உங்களுடைய ஒத்துழைப்பை இந்த மூன்றாவது ஆண்டிலும், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும், நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

The post விமர்சனத்தைப் பற்றி இம்மி அளவும் நான் கவலைப்படவில்லை..நல்லதை எடுத்துக் கொள்வேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: