ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தானில் விரைவில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சித்தோர்காரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பிரியாவிடைக்கான கவுன்ட் டவுண் துவங்கி விட்டது என்பது அசோக் கெலாட்டுக்கு தெரியும். பாஜவுக்கு மறைமுகமாக பாராட்டு தெரிவிக்கும் விதமாக அரசின் திட்டங்கள் நிறுத்தப்படக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுக்கிறார். அந்த திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது என நான் உறுதி அளிக்கிறேன். மேலும் அந்த திட்டங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வோம்.

இதுதான் மோடியின் உறுதி மொழி. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் அது மனதை பாதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அதே போன்ற குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. தேர்வாணைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களை ரகசியமாக வெளியிடும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு உதய்ப்பூரில் டெய்லர் கன்னையா லால் 2 பேரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதை கொலையாளிகள் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இஸ்லாம் குறித்து இழிவாக கருத்து தெரிவித்ததற்கு பழிவாங்க இந்த செயலை செய்துள்ளனர். இதில் கூட வாக்குகளுக்காக காங்கிரஸ் பயப்படுகிறது. பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு அளி ப்படும்’’ என்றார்.

*முதல்வர் வேட்பாளர் யார்?
சித்தோர்கார் பொதுக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே பெயரை மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

The post ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: