12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

சென்னை: நாளை நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்புடன் 875 வழித்தடங்களில் வினாத்தாள்கள் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 7.72 லட்சம் பேர் +2 பொதுத்தேர்வை நாளை எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

The post 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: