சென்னை: தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள தூய்மை மிஷனில் அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது. யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாக குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களை பெறவேண்டுமென்றால், குப்பையை தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிக பண்பு இன்றியமையாதது. விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை_Mission-ல் அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தூய்மை மிஷனில் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்: முதல்வர் அழைப்பு appeared first on Dinakaran.