அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகளை தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார். பேரிடர் வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் தூத்துக்குடி மாவட்டம் முழுமையாக மீள்ந்து வர முடியாத ஒரு சூழல் உள்ளது. மழைவெள்ளத்த்தால் ஏற்பட்டுள்ள சேதம் என்பது மிகபெரிய அளவில் உள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திற்குட்ட்ட சிறிய கிராமங்களும் பெருமளவில் பாதிக்கபட்டுள்ளது. இது போன்ற சூழலில் நிவாரண நடவடிக்கைகளை துரிதபடுத்தகூடிய வகையில், தொடர்ச்சியாக முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடக்கிவைத்திருந்தனர். இந்த சூழலில் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு செய்துவருகிறார்.

ஏற்கனவே சாலை துண்டிப்பு ஏற்பட்ட அந்தோணியாபுரம் நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர், தொடர்சியாக மழை நீர் வடியாத குறிஞ்சி நகர், முத்தமாள் காலணி பகுதியில் மழை நீர் வடியாத இடங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக மேம்பாலங்கள், எட்டையாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

The post அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: