இந்நிலையில் தலைமை செயலகத்தில் வரும் பிப்ரவரி 25ம் தேதி மதியம் 12 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
The post முதல்வர் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.
