26ல் குடியரசு தினவிழா; பிப்.15 வரை ட்ரோன் பறக்க தடை: டெல்லி போலீஸ் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் வரும் பிப். 15ம் தேதி வரை ட்ரோன் பறக்க டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிப்ரவரி 15ம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 26ல் குடியரசு தினவிழா; பிப்.15 வரை ட்ரோன் பறக்க தடை: டெல்லி போலீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: