‘சரக்கு’ லாரி கவிழ்ந்து விபத்து: ரோட்டில் ஆறாக ஓடிய பீர்

திருப்பூர்: திருப்பூர் அருகே பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் உடைந்து சேதமானது. செங்கல்பட்டில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 25 ஆயிரத்து 200 பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை லாரி செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பல்லகவுண்டம்பாளையம் அருகே பின்னாடி வந்த பஸ் லாரியை கடந்து சென்றபோது, சாலையோரம் ஒதுக்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் ரோட்டில் உடைந்து சேதமானது. அந்த பீர் பாட்டில்களை மது பிரியர்கள் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் இயந்திரத்தை வரவழைத்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ‘சரக்கு’ லாரி கவிழ்ந்து விபத்து: ரோட்டில் ஆறாக ஓடிய பீர் appeared first on Dinakaran.

Related Stories: