கூட்டுறவுதுறையில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வு பெரம்பலூரில் 100 பேர் தேர்வு எழுதினர்

பெரம்பலூர், டிச.7: கூட்டுறவுதுறையில் காலியாகவுள்ள எழுத்தர் பணியிடத்திற்கா ன எழுத்துத்தேர்வு பெரம்ப லூர் மாவட்டத்தில் 53 பெ ண்கள் உள்பட 100 பேர் எழு தினர். மாநில கூடுதல் பதி வாளர் பிருந்தா நேரில் ஆய்வு. கூட்டுறவுத் துறையில் காலியாகவுள்ள எழுத்தர் பணி யிடத்திற்கான எழுத்துத் தேர்வு தமிழக அளவில் நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பலூர்மாவட்ட அள வில், கூட்டுறவு சங்கங்களி ன் மண்டல இணைப்பதி வாளர் கட்டுப்பாட்டிலுள்ள, கூட்டுறவு நிறுவனங்களி ல் காலியாகவுள்ள 28 எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பெரம்ப லூர்- துறையூர் சாலையில் உள்ள தனலெட்சுமி சீனி வாசன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்காக பெரம் பலூர் மாவட்ட அளவில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 166 பேர்களுக்கு, கூட்டுறவுத் துறையின் பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப் பட்டிருந்தது. இருந்தும் நேற்று நடைபெற்ற எழுத் துத் தேர்வில் 53 பெண்கள், 47 ஆண்கள் என மொத்தம் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வுஎழுதினர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தேர்வில் கூட்டுறவு த்துறை, கணக்குப் பதிவி யல், தமிழ், வரலாறு, கணினி அறிவியல் தொடர்பான 200 கேள்விகளுக்கான கேள்வித்தாள் வழங்கப்பட்டு, விடைத்தாளில் விடைகளை அடையாளப்படுத்த கோரப் பட்டிருந்தது.

தேர்வு மையத்தை தமிழ்நா டு மாநில கூட்டுறவு.வேளா ண்மை மற்றும் ஊரக வளர் ச்சி வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான பிருந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போ து, பெரம்பலூர் மாவட்ட கூட் டுறவு சங்கங்களின் மண் டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், சரக துணைப் பதிவாளர் பாண்டிதுரை, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் முத்தமிழ்ச் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: