ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

ஜெயங்கொண்டம், ஜூலை 3: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025ம் ஆண்டிற்கான இளங்கலை(தமிழ், ஆங்கிலம் மற்றும் வணிகவியல்) மற்றும் இளமறிவியல்(கணிதம் மற்றும் கணினி அறிவியல்) காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்குக்கு ஏற்கனவே TNGASA இணையதளம் மூலம் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை TNGASA இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே.

ஜூலை 8ம் தேதி அன்று மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் வெளியிடப்படும் zரவரிசையைக்கொண்டு மாணவர்கள் தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். மாணவ, மாணவியர் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் வருகை தரவேண்டும். கலந்தாய்விற்கு வரும் போது 10, +1, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் (Original) மற்றும் நகல்கள் -2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் 2, ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வரவேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வரவேணடும். கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சேர்க்கை முழுமையடையும் என கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: