ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்

பெரம்பலூர், ஜூன் 27: சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க மாணவர்கள்தான் அதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி வளவன் வேண்டுகோள் விடுத்தார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தர வின்படி, பெரம்பலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி வளவன் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் சாகித், உதவி ஆய்வாளர் நடராஜன்ஆகியோர் நேற்று பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடத்தில் டிஎஸ்பி வளவன் பேசும்போது, சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலி யல் தொடர்பான வழிப்பு ணர்வு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட் களை உபயோகப்படுத்து வதால் ஏற்படும் தீமைகள், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நலதிட்ட உத விகள் குறித்துப்பேசி விழி ப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் கல்வியின் முக்கிய த்துவங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றியும், கட்டாயம் கல்வி கற்றால் தான் சிறந்த மனிதனாக வும், ஆற்றல் மிக்கவராக வும், நல்லெண்ணம் நற் செயல் நற்பண்பாடு ஆகிய வற்றில் சிறந்து விளங்கும் ஒரு நபராக இருக்க முடியும் என்று கல்வி குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டைக் குவளை முறை மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளே இல்லாத மனிதாபிமானமிக்க சமூக த்தை உருவாக்க வேண்டு மெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதையும் மாணவ, மாணவிகளிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் மற்றும் பெண்கல்வியின் முக்கியத் துவம் குறித்தும் மாணவிக ளிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறுது ணையாக இருக்க வேண் டும் என்பதையும் கேட்டுக் கொண்டு மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

The post ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: