தயார் நிலையில் 4.19 கோடி புத்தகங்கள்: பள்ளிகளுக்கு விரைவில் வினியோகம்

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு விலையில்லாமல் வழங்குவதற்காக 4 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் 32 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்ற மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா பாடப்புத்தகங்களை, தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வினியோகம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் கடந்த மார்ச் மாதம் அச்சிடும் பணியை தொடங்கியது. தற்போது அந்த பணிகள் முடிந்துள்ளன.

214 பொது வான தலைப்புகளிலும், 281 சிறுபான்மையினருக்கான பாடப்புத்தகங்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2 கோடியே 72 லட்சம் புத்தகங்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு விலையின்றி வழங்கப்படும். இது தவிர 1 கோடியே 47 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காகவும் அச்சிடப்பட்டுள்ளன. விலையில்லாப் புத்தகங்கள் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது, அனைத்து அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

* இந்த ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் கடந்த மார்ச் மாதம் அச்சிடும் பணியை தொடங்கியது. தற்போது அந்த பணிகள் முடிந்துள்ளன.

* 214 பொது வான தலைப்புகளிலும், 281 சிறுபான்மையினருக்கான பாடப்புத்தகங்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளன.

The post தயார் நிலையில் 4.19 கோடி புத்தகங்கள்: பள்ளிகளுக்கு விரைவில் வினியோகம் appeared first on Dinakaran.

Related Stories: