புக்கோர்!

எத்தனை யுகங்கள் சென்றாலும் என்னதான் கணினி, மொபைல், டேப் என வளர்ச்சி அடைந்தாலும் கையால் புத்தகத்தைத் தொட்டுப் பிரித்துப் பார்த்து படிக்கும் ஆனந்தமே அலாதிதான். அப்படி இக்காலத்திலும் புத்தகங்களைத் தேடிச் சென்று படிக்கும் படிப்ஸ் மக்களுக்காகவே வரப்பிரசாதமாக அமைந்துள்ள மொபைல் செயலிதான் புக்கோர் – ஆன்லைன் புக் ஸ்டோர் (BookChor – Online Bookstore). தற்சமயம் ஆங்கிலப் புத்தகங்கள் மற்றும் சில இந்திப் புத்தகங்கள் இடம் பிடித்திருக்கும் இந்தச் செயலியில் விரைவில் மற்ற மொழி புத்தகங்களும் வரவிருக்கின்றன. அதிலும் இங்கே இருக்கும் அடுத்த சிறப்புச் சலுகை விலைதான். 50% முதல் சலுகைகள் ஏராளமாகவும், மேலும் காம்போ சலுகைகள், பண்டில் சலுகை என பட்ஜெட்டில் புத்தகங்கள் வாங்கலாம். பொதுவாகவே ஆங்கில நாவல்கள், நாவல் சீரிஸ்கள் எல்லாமே விலை அதிகம் என்கையில் இந்தச் செயலி பட்ஜெட்டில் பல புத்தகங்களை
அள்ளிக் கொடுக்கிறது.

The post புக்கோர்! appeared first on Dinakaran.

Related Stories: