தமிழ்நாட்டில் உணவகங்களில் புகைக்குழல் கூடம் திறக்க தடை விதித்த உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

 

சென்னை: உணவகங்களில் புகைக்குழல் கூடம் திறக்க தடை விதித்த உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது. உணவுக்கூடங்கள் உட்பட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி இருந்தது. சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கப்படக் கூடாது என அரசிதழில் வெளியிட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது. மேலும், விதிகளை மீறி புகைக்குழல் கூடம் திறந்தால் ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் குறுந்தலைப்பு தயாரிப்புகள், விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், மற்றும் தொடக்கம். உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல் தமிழ்நாடு திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும். இது மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2003ஆம் 3ஆம் பிரிவிற்கான ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் விளம்பரம் செய்தலைத் திருத்தம். தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல் சட்டத்தின் 3ஆம் பிரிவில் புகைக்குழல் கூடம்” என்பது, பகிர்ந்துகொள்ளும் புகைக்குழல் அல்லது தனியாக வழங்கப்படக் கூடிய தென்னைப் புகைக்குழலில் இருந்து புகையிலையைப் புகைப்பதற்கு மக்கள் ஒன்று கூடுவதற்கான ஒரு அமைவிடம் என்று பொருள்படும்.

புகைக்குழல் கூடம் என்பது, புகைக்குழலை பகிா்ந்து கொள்வது அல்லது தனியாக வழங்கக் கூடிய புகைக்குழலில் இருந்து புகையிலையைப் புகைப்பதற்கு மக்கள் ஒன்றாகக் கூடுவதாகும். இந்த புகைக்குழல் கூடத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, எவரேனும் சொந்தமாகவோ அல்லது பிற நபரின் சாா்பாகவோ, உணவுக்கூடம் உள்ளடங்கிய எந்த இடத்திலும் புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ அல்லது வாடிக்கையாளா்களுக்கு புகைக்குழலை வழங்ககூடாது என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரில் புகைக்குழல் கூடங்கள் அதிகளவில் பெருகி, உடல் நலத்துக்குக் கொடிய சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பல உணவகங்கள் புகைபிடிக்கும் பகுதிகளில் புகைக்குழலை அனுமதித்து வருவதாகவும், இப்போது மாநிலத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஏதுமில்லை என்றும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், புகைக்குழல் கூடத்தை நடத்த தடை விதித்து அரசு மசோதா கொண்டு வந்துள்ளது.

* கைப்பற்றுதலுக்கான அதிகாரம்,

மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறது அல்லது மீறப்பட்டுள்ளது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம்.”

* புகைக்குழல் கூடத்தினை நடத்துவதற்கான தண்டனை

4A ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

The post தமிழ்நாட்டில் உணவகங்களில் புகைக்குழல் கூடம் திறக்க தடை விதித்த உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: