அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் புளியமங்கலம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறால் ஏற்பட்டுள்ளது. சென்னை செல்ல வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை- பெங்களூரு, நீலகிரி எக்ஸ்பிரஸ், காவேரி விரைவு ரயில் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. தண்டவாள பழுதினை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
The post அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறு: விரைவு ரயில்களின் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.
