2020ல் விண்ணப்பித்ததற்கு 2025ல் நியமன ஆணை பீகார் மூத்த அமைச்சர் உதவி பேராசிரியராக தேர்வு

பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையின் மூத்த அமைச்சரான அசோக் சவுத்ரி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அசோக் சவுத்ரி மாநில பல்கலைக்கழகம் ஒன்றின் உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அசோக் சவுத்ரி தன் எக்ஸ் பதிவில், “அரசியலுக்கு நான் வர காரணமாக இருந்த என் தந்தை, அரசியலில் ஈடுபடுவதற்கு வலுவான அடித்தளம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்காக நான் முனைவர் படிப்பும் முடித்தேன். 2020ல் மாநில பல்கலைக்கழகத்தில் காலி பணியிடம் வந்தபோது விண்ணப்பித்தேன். தற்போது உதவி பேராசிரியராக பணி நியமன ஆணை வந்துள்ளது. நான் உதவி பேராசிரியராக சேர்ந்தாலும் அரசியலில் இருந்து விலக மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

The post 2020ல் விண்ணப்பித்ததற்கு 2025ல் நியமன ஆணை பீகார் மூத்த அமைச்சர் உதவி பேராசிரியராக தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: