சாதியின் அடிப்படையில் யாரையும் நீக்கக்கூடாது!: கோயில்களில் ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம்..ஐகோர்ட் தீர்ப்பு..!!

சென்னை: கோயில்களில் குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து அந்த கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், சுகவனேஸ்வரர் கோயில் ஆகம அடிப்படையிலானது என்பதால் அறநிலையத்துறை அறிவிப்பில் தகுதிகள் குறிப்பிடப்பட வேண்டும். தகுதிகளை குறிப்பிடாமல் அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகம விதிகளின் படி உள்ள கோயில்களில் ஆகமம் செய்பவர்களை நியமிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதை பின்பற்றி சர்க்கார்கள் நியமனம் செய்வதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என தீர்ப்பு வழங்கினார். ஆகம கோயில் எது, ஆகமம் அல்லாத கோயில் எது என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்க தேவையில்லை.

பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். அந்தந்த கோயில்களின் சொத்து பதிவேட்டில் கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம். ஆகம விதிகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோயில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம். சாதியின் அடிப்படையில் யாரையும் நீக்கக்கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

The post சாதியின் அடிப்படையில் யாரையும் நீக்கக்கூடாது!: கோயில்களில் ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம்..ஐகோர்ட் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: