தமிழ்நாட்டில் மருந்துக்கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுரை

சென்னை:  விஷச் சாராய மரணம் எதிரொலியாக ஆல்கஹாலின் மூலப் பொருட்களாக இருக்கும் மருந்து பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கபப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்துக்கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தியதாக 150 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையானது நேற்று இரவு வரை 39 ஆக அதிகரித்திருந்தது. இந்த சூழலில் தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 90 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் சூழலில், ஒருவருக்கு இரண்டு மருத்துவர்கள் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

விஷச் சாராய மரணம் எதிரொலியாக மருந்து கடைகளில் சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளனர்.

அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குவோரிடம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டு. விதிமீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஸ்பிரிட், சானிடைசர் ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவற்றை முறைப்படி விற்க மருத்துக்கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

The post தமிழ்நாட்டில் மருந்துக்கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: