இந்தநிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே 9-ந்தேதி தமிழகத்தில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மி.லி. ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் 500 மி.லி. டிலைட் பால் ரூ.21 விலையில் மாதாந்திர பால் அட்டைகள் இன்று முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.10-க்கு 200 மி.லி. ஆவின் டிலைட் பால், இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையாகி வருகிறது.
The post ரூ.10-க்கு ஆவின் டிலைட் 200 மி.லி. பால் பாக்கெட்: தமிழகம் முழுவதும் விற்பனை தொடக்கம்!! appeared first on Dinakaran.