பின்னர் 281 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி,8 விக்கெட்களை இழந்த நிலையில் 282 ரன்கள் குவித்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது.தொடக்க வீரர் க்வாஜா 2 இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.2வது இன்னிங்சில் கேப்டன் கம்மின்ஸ்(44* ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிய க்வாஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
The post ஆஷஸ் 2023: பரபரப்பான முதல் போட்டியில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.! appeared first on Dinakaran.