மணல் கடத்திய

பாபநாசம், டிச. 1: பாபநாசம் பகுதியில் மணல் கடத்தியதாக லோடு, வேன், மாண்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.பாபநாசம் கபிஸ்தலம் அடுத்த வாழ்க்கை பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனால் சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.இதேபோல் கபிஸ்தலம் அருகே தாவாரங்குடி பகுதியில் கபிஸ்தலம் பயிற்சி எஸ்ஐ வெற்றிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மண்ணியாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கபிஸ்தலம் பயிற்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப்பதிந்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தார். பாபநாசம் அருகே மெலட்டூர் கொத்தங்குடியில் தாசில்தார் முருகவேல் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்து மெலட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: