அசீல், கடக்நாத் இன கோழி வளர்ப்பு முறைகள்

புதுக்கோட்டை, ஏப். 27: குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்று புறக்கடை கோழி வளர்ப்பு போன்று எளிய நடைமுறையில் நன்கு வளர்க்கப்படும் கோழியினங்களில் அசீல் மற்றும் கடக்நாத் இனம் தற்போது பிரசித்தி பெற்று வருகிறது. பிராய்லர் போன்று அல்லாமல் கலப்பினம் மூலம் அதிக இறைச்சியும் உடைய கோழி இனங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற நாட்டுக்கோழி ஒத்துடையவை இனமாகும். நாட்டுக் கோழிகள் என்பன நமது கிராமங்களில் வளர்க்கப்படும் சாதாரண நாட்டுக் கோழிகளையும், “ரோட் ஐலேண்ட் ரெட்” எனப்படும் ஆங்கிலேய இனக் கோழிகளையும் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட வீரிய இன நாட்டுக் கோழிகள் ஆகும். இவை புறக்கடையில் வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து கொண்டு வரப்படும் ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள், விஞ்ஞான முறைப்படி அமைக்கப்பட்ட பண்ணைகளில் ஒரு மாதம் வரை வளர்க்கப்படுகின்றன.

அவ்வாறு வளர்க்கப்பட்ட ஒரு மாத வயதுடைய குஞ்சுகள் புறக்கடையில் வளர்ப்பற்கு ஏற்ற நிலையை அடைகின்றன. பொதுவாக கோழிக்குஞ்சுகளை ஒரு மாத வயது வரை வளர்ப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். நாட்டுக் கோழிகளின் பராமரிப்பில் வளர்க்கப்படும் குஞ்சுகளே காகம், பூனை, பருந்து, நாய் போன்ற பிராணிகளின் பிடியில் இருந்து தப்ப முடிவதில்லை. மேலும் நோய் தாக்குதலுக்கு இளம் குஞ்சுகள் பெரிதும் ஆட்படுவதால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே குராய்லர் குஞ்சுகள் பண்ணைகளில் விஞ்ஞான முறைப்படி தீவனம், தடுப்பு மருந்துகள் ஆகியவை கொடுத்து வளர்க்கப்பட்டு, புறக்கடையில் வளர்ப்பதற்கு தயார்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஒரு மாத வயதுடைய குஞ்சுகள் புறக்கடையில் வளர்க்கப்படும் பொழுது எளிதில் சூழ்நிலையைப் பழக ஏதுவாவதுடன் நோய் மற்றும் எதிரிப்பிராணிகளின் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

அசீல் மற்றும் கடக்நாத் நாட்டுக் கோழிகள் எங்ஙனம் சாதாரண நாட்டுக் கோழிகள் மற்றும் வணிக ரீதியான கோழிகளை விட சிறந்தவை? குணங்கள் முட்டைக் கோழி சாதாரண நாட்டுக் கோழி அசீல் மற்றும் கடக்நாத் நாட்டுக் கோழி தீனியை இறைச்சியாக மாற்றும் திறன் வளர்சசி வேகம் ஒரு மாத வயது எடை ஒரு வருடத்தில் இடும் முட்டைகளின் எண்ணிக்கை இறைச்சி மற்றும் முட்டையிலுள்ள நுண்சத்துக்களின் அளவு வளர்ப்புச்செலவு சராசரி முட்டை விலை (1 முட்டை) சராசரி இறைச்சி விலை (1 கிலோ) இறைச்சிக்கான விற்பனை அதிகம்.

கோடையில் பராமரிப்பு முறைகள்: முதல்வாரப்பராமரிப்பு 1. குஞ்சுகளை வாங்கிய உடன் அவைகளை சுத்தமான மற்றும் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். 2. காய்ச்சி ஆறவைத்த சுத்தமான குடிநீருடன் “நோய் எதிர்ப்பு கோழி மருந்து” கலந்து அளிக்க வேண்டும். 3. உடைத்த தானியங்களில் ஏதேனும் ஒன்றினை கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். படிப்படியாக சமையல் கழிவுகளையும் சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். 4. இரவில் பாதுகாப்பான மற்றும் காற்றோட்டமான இடத்தில் அடைத்து வைக்க வேண்டும். ஆ. இரண்டாவது வாரத்திலிருந்து பராமரிப்பு 1. கோழிகளை புறக்கடையில் மேய விட வேண்டும். 2. வீடுகளில் கிடைக்கும் அனைத்து சமையல் கழிவுகள் மற்றும் தானியங்களை உணவாகக் கொடுக்கலாம். கோ-4 புல், கீரை வகைகளை நறுக்கிப் போடுவது நல்லது. 3. கோழிகளின் வேகமான வளர்ச்சிக்கு கரையான்கள், கடலை புண்ணாக்குத் தூள் மற்றும் கருவாட்டுத்தூள் ஆகிய உணவுகளை அளிப்பது நல்ல பலனளிக்கும்.

தூய்மையான தண்ணீரை அளிக்க வேண்டும். 5. கோழிகளை இரவு நேரங்களில் நல்ல இடவசதி மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களில் அடைக்க வேண்டும். கோழிகள் அடைக்கும் இடத்தை தினமும் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை கிருமிநாசினி தெளித்து கிருமிகளை அழித்து நோயைத் தடுக்கலாம். 7. பூனை, கீரி போன்ற விலங்குகளிடம் இருந்து கோழிகளைப் பாதுகாக்க வேண்டும். முறைகோழிகளின் வேகமான வளர்ச்சிக்கு கரையான்களை புறக்கடையில் வளர்த்து அளிப்பது சிறந்தது. இம்முறையில் முட்டைகளும் உற்பத்தி அதிகரித்து இத்தொழில் மூலம் இலாபம் ஈட்டஇந்த தகவலை
கால்நடை மண்டல ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் புவராஜன், தெரிவித்துள்ளார்.

The post அசீல், கடக்நாத் இன கோழி வளர்ப்பு முறைகள் appeared first on Dinakaran.

Related Stories: