உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்்

சேலம், நவ.21: திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தேர்தல் பிரசாரத்தை, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கினார். அங்கு, பிரசாரத்திற்கு அனுமதி மறுத்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர், மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகம் எதிரே திரண்டனர். அங்கு, உதயநிதி ஸ்டாலினை கைது செய்த அதிமுக அரசை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். சாலைமறியல் செய்ய முயன்று, முன்னோக்கி வந்தவர்களை டவுன் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாநகர செயலாளர் கிரிதரன், மாவட்ட துணைத்தலைவர் மேகநாதன், துணைச்செயலாளர் சுரேஷ்குமார், தாரமங்கலம் ஒன்றிய தலைவர் னிவாஸ், சிவக்குமார் உள்ளிட்ட 49 பேரை போலீசார் கைது செய்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்: சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் மறியல் நடந்தது. இதில், நிர்வாகிகள் ரமேஷ், செல்வகுமரன், பாலசுப்பிரமணியம், ரவிச்சந்திரன், லோகநாதன், ரவிச்சந்திரன், அருண்பிரசன்னா, கருணாகரன், சம்பு சண்முகம், ரமேஷ், சங்கர், அழகிரி, தேன்மொழி தனசேகரன், லலிதா அருள்பாலாஜி, செல்விராஜா, பெருமாள், நாகராஜ், தினேஷ்பாபு, லியாகத்அலி, பிரகாஷ், பாலமுருகன், முத்துகுமார், மகேந்திரன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் ஆத்தூரில்50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>