வேலூர் ரங்காபுரம் ஏரியூரில் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

வேலூர், நவ.21: வேலூர் ரங்காபுரம் அடுத்த ஏரியூரில் வீரஆஞ்சநேயர் கோயில் உண்டியல் உடைத்து ₹2 ஆயிரத்தை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் ஏரியூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோயில் நிர்வாகக்குழுவினர் விரைந்து வந்து பார்த்தபோது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>