திமுகவில் முன்னாள் மேயர் முத்து பேரன்

மதுரை, நவ.12: முன்னாள் மேயர் மதுரை முத்துவின் பேரன் திமுக.வில் இணைந்தார். மதுரை முன்னாள் மேயர் மதுரை முத்துவின் பேரன் இளங்கோவன். இவர் நல்லதம்பியின் மகனாவார். நேற்று இளங்கோவன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் மதுரை திமுக பொறுப்புக் குழு தலைவர் தளபதி, பொறுப்புக்குழு உறுப்பினர் முன்னாள் மேயர் குழந்தைவேலு முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். நிகழ்ச்சியில் திமுக அவைத்தலைவர்கள் மோகன், அழகரடி கண்ணையா, பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Related Stories: