சிறு தொழில் கடன் கருத்தரங்கு

தொண்டி, நவ.10:  நம்புதாளையில் சிறு தொழில் மையம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் இணைந்து சிறு தொழில் கடன் குறித்த பொதுமக்களுக்கு விளக்கும் கருத்தரங்கு நடைபெற்றது. அரசு சார்பில் தொழில் துவங்க, தொழிலை விரிவு படுத்த என வழங்கப்படும் கடன் மற்றும் மானியம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த கூட்டம் நடைபெற்றது. மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் தலைமை வகித்தார். வட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். ஊராட்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் குறித்து நாகமுத்து பேசினார்.

ராமநாதபுரம் தொழில் மைய ஆய்வாளர் ரபீக உசேன் பேசுகையில், தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருப்பதால் அரசு பல்வேறு கடன் உதவிகளை அறிவித்துள்ளது. தொழில் துவங்க, உற்பத்தி தொழில், சேவை தொழில், வியாபாரம் என பல வகைகளில் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தொழில்களுககு மானியமும் உள்ளது. இளைஞர்கள் இதை பயன்படுத்தி சுய தொழில் துவங்கலாம். மகளீர் மன்றங்கள் மூலம் கூட்டு தொழில் துவங்கலாம். மாற்றுத்திறனாளிகள், படிக்காதவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடன் வழங்கப்படும். அனைத்து விவரங்களும் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார். இதில் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், முன்னாள் மீனவர் சங்க தலைவர் ஆறுமுகம், மேற்கு தெரு ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்துகொண்டனர். மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Stories: