கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் ஆன்லைனில் மாநில வினாடி-வினா போட்டி: ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவில்பட்டி, நவ. 9: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் ஆன்லைனில் நடத்தப்பட்ட மாநில வினாடி- வினா போட்டியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 6வது முறையாக மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் ஆன்லைனில் வினாடி வினா போட்டி நடந்தது. கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் காளிதாஸ முருகவேல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். வேதியியல் பேராசிரியர் தம்பா வரவேற்றார். கணித பேராசிரியை பாஷிதா பர்வீன், பிரபல குவிஷ் மாஸ்டர் சுமன்ந் ராமனை அறிமுகப்படுத்தினார்.

இதில் 528 மேல்நிலைப் பள்ளிகள் சார்பில் பங்கேற்ற 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.25 ஆயிரத்தை மணப்பாறை, லட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவர் டேணி ஸ்டீவ் வென்றார். 2ம் பரிசு ரூ.15 ஆயிரத்தை மதுரை மாவட்டம், மகாத்மா குலோபல் கேட்வே பள்ளி மாணவர் மதன் வென்றார். 3ம் பரிசு ரூ.10 ஆயிரத்தை தூத்துக்குடி மாவட்டம், எடுஸ்டார் இன்டெர்நேஷனல் பள்ளி   மாணவர் ஜெய் கணேஷ் பெற்றார். ஆறுதல்  பரிசாக தலா ரூ.5 ஆயிரத்தை தூத்துக்குடி மாவட்டம் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவர் சர்தக் தேகோங்கர்,

புதுச்சேரி மாவட்டம் பெட்டிட் செமினெரி மேல்நிலைப்பள்ளி மாணவர் விஜய கணபதி, திருவள்ளுர் மாவட்டம் போரூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிகரன், நெல்லை சங்கர்நகர் ஜெயந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளி மாணவர் முகமது சமீர், மதுரை மாவட்டம் டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பால சித்தார்த்தன், ராம், கோவில்பட்டி எ டு ஸ்டார் இன்டெர்நேஷனல் பள்ளி மாணவர் விஜய ஆகாஷ், தூத்துக்குடி  ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி மேக நிதிலா, இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி, கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் வசந்தராகவன் வென்றனர்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர், இயக்குநர், முதல்வர்  வழிகாட்டுதலின்படி துறைத் தலைவர் நீலகண்டன், வினாடி- வினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கோமதி, தாளமுத்து, பேராசிரியைகள் சசிரேகா, அன்னபூபதி, பாஷிதா பர்வீன், பேராசிரியர் அருள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: