கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11ம்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்  பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பூஜைகளை செண்பக ராமன், ரகு, கணேஷ் பட்டர் முன்னின்று நடத்தினர். வரும் 11ம்தேதி வரை நடைபெறும் திருவிழாவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உள்வீதியுலா இடம்பெறும். இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்பர். பூஜை நேரங்களில் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. வரும் 11ம்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

 கொடியேற்ற நிகழ்ச்சியில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ, உதவி ஆணையாளர் ரோஜாலி சுமதா, செயல்  அலுவலர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, மாவட்ட தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் துணைச் சேர்மன் சுப்புராஜ், அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், போடுசாமி, ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்க மாரியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: