விலைவாசி உயர்வை கண்டித்து பலூன்கள் பறக்கவிட்டு மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக். 29: அத்தியாவசிய பொருட்களான பல்லாரி, பருப்பு, பெட்ரோல் உள்ளிட்டவை விலை உயர்வை கண்டித்தும், சம்பளஉயர்வு குறைப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, வேலைவாய்ப்பு இன்மை ஆகியவற்றை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 9ம் தேதி குமரி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநகர மார்க்சிஸ்ட் சார்பில் விலைவாசி உயர்ந்து வரும் பொருட்களை பலூன்களில் எழுதி பறக்கவிட்டும், வேலைவாய்ப்பு இழப்பு, வறுமையில் தவிப்பு, சம்பளம்  குறைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் பலூன்கள் கீழே பறப்பதுபோல் நூதன முறையில் நேற்று வடசேரி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரகுழு உறுப்பினர் ராஜநாயகம், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, பேராசிரியர்கள் மனோகர்ஜெஸ்டஸ், நாகராஜன், வட்டாரகுழு உறுப்பினர்கள் பெஞ்சமின், ஜோசப், பிரேம்ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: