தக்கலை மணலி ஜங்சனில் தூர் வாரப்படாத கழிவு நீர் ஓடை: பொதுமக்கள் வேதனை

 

நாகர்கோவில், மே 25: பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியான மணலி ஜங்சனில் கழிவுநீர் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து, வீட்டை விட்டு மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மழைக்கால தொற்று நோய்கள் உருவாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீர் ஓடையை சுத்தப்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post தக்கலை மணலி ஜங்சனில் தூர் வாரப்படாத கழிவு நீர் ஓடை: பொதுமக்கள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: