கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் மனு அனுப்பும் போராட்டம் சிதம்பரத்தில் சிறப்புத்தலைவர் பேட்டி

சிதம்பரம், அக். 22:     சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இதற்காக தமிழக அரசு உடனடியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதிய மாற்று குழு அமைக்க வேண்டும். ஊழியர்களுக்கு கொரோனா கால இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 எனவே  இதை கணக்கில் கொண்டு மாநில அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தும் போது உணவுத்துறை அமைச்சர் அதை முறையாக பரிசோதனை செய்து, சரிபார்த்து பின்னர் அமல்படுத்தி இருக்க வேண்டும். செல்போன் பிரச்னை, சர்வர் பிரச்னை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. விரல் ரேகைக்கு பதிலாக விழித்திரையை பயன்படுத்தும் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், என்றார்.

Related Stories: