தா.பழூர் அருகே வறட்சி, பேரிடர் காலங்களில் பயிர் மேலாண்மை பயிற்சி

தா.பழூர், அக்.22:  தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் வறட்சி மற்றும் பேரிடர் காலங்களில் பயிர் மேலாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வேளாண்மை துறை சார்ந்த வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 20 விவசாயிகள் 5 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 5 வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தோட்டக்கலை உதவி இயக்குநர் நல்லமுத்து வறட்சிகால தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். மேலும் விருத்தாசலம் வேளாண் அறிவியல் மைய தலைவர் ராம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வறட்சி மற்றும் பேரிடர் காலங்களில் பயிர் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பங்களை மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜா ஜோஸ்லின், அசோக்குமார்ஆகியோர் எடுத்து கூறினர்.

Related Stories: